சூடான செய்திகள் 1

முருங்கன் மாவிலங்கேணி அடைக்கல மாதா தேவாலயத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதி ஒதுக்கீடு!!!

(UTV|COLOMBO)-நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் மாவிலங்கேணி கிராமத்தின் அடைக்கல மாதா தேவாலயத்தின் அபிவிருத்திக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், தேவாலயத்தின் தரையை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் நேற்று(19) ஆரம்பித்து வைத்தார்.

நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் கிறிஸ்ட்ரி சந்திரிக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஞானராஜா, மரியசீலன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், நானாட்டான் பிரதேச இணைப்பாளர் ராஜன் மார்க் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும்
கலந்துகொண்டனர்.

–ஊடகப்பிரிவு-

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

7 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…