(UTV|INDIA)-பிக் பாஸ் முதல் பாகத்தில் சாம்பியன் பட்டம் வெற்றவர் ஆரவ். இவரது முதல் படமான ‘ராஜாபீமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இது குறித்து ஆரவ் கூறும்போது, ‘ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மிகச்சரியான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அது நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி, அதே நேரத்தில் என் தோள்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது.
ராஜா பீமா தலைப்பு மற்றும் போஸ்டர் பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மை தான், அந்த போஸ்டர்கள் அப்படி ஒரு உணர்வை கொடுப்பது இயல்பு தான். ஆனால், இது மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும். பல்வேறு வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது நிறைய இடங்களில் நடந்து வரும் கொடுமையான ஒரு விஷயம். அதை கமெர்சியல் விஷயங்கள் கலந்து சொல்ல இருக்கிறோம்” என்றார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]