கேளிக்கை

சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்ற தமிழ் நடிகை

(UTV|INDIA)-பாரதிராஜாவின் ‘மண் வாசணை’ படத்தில் அறிமுகமான நடிகை ரேவதி அதன்பின்னர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்த நடிகை ரேவதி மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரையுலகில் அவரது வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தாலும் அவரது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ்மேனனை காதல் திருமணம் செய்து கொண்ட ரேவதி ஒருசில ஆண்டுகளில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று அதன் பின்னர் தனித்தே வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரேவதி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. இந்த குழந்தை குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ரேவதி தற்போது அந்த குழந்தையை தான் ஐந்து வருடங்களுக்கு முன் டெஸ்ட் டியூப் மூலம் பெற்றெடுத்ததாக கூறியுள்ளார். இந்த குழந்தைக்கு மஹி என்ற பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலியானாவா இது?

குத்தாட்டத்துக்கு ஓகே சொல்லும் தமன்னா

மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்