(UTV|INDIA)-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் ‘பேட்ட’ என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதும் அந்த டைட்டில் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு முதன்முதலாக இசையமைக்கும் இளம் இசைப்புயல் அனிருத் சற்றுமுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்திற்காக கம்போஸ் செய்த ஒரு அட்டகாசமான தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளார்.
பட்டையை கிளப்பும் இந்த ‘பேட்ட’ தீம் மியூசிக் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் அனிருத்தின் இசை வேற லெவலில் இருக்கும் என்பது இந்த ஒரு சின்ன பிட்டில் இருந்தே தெரிவதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
[ot-video]
#Petta ???????? pic.twitter.com/a2tb7bexLg
— Anirudh Ravichander (@anirudhofficial) September 11, 2018
[/ot-video]
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]