வகைப்படுத்தப்படாத

உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

(UTV|AMERICA)-அல் – கய்தா தீவிரவாத அமைப்பினரால் உலக வர்த்தக மையம் மீது தாக்கப்பட்டு இன்றைய தினத்துடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

அமெரிக்காவின் நான்கு விமானங்கள் மூலம் வொஷிங்டனில் அமைந்துள்ள பெண்டகன் பாதுகாப்பு மையம் மீதும் நிவ்யோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் கட்டிடம் மீதும் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 2996 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதோடு 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு

ඉදිරි පැය 24 දී මුහුදු ප්‍රදේශවල සුළගේ වේගය ඉහළට

உலக நுகர்வோர் தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்