கேளிக்கை

அனிருத் இசையமைக்கும் ரஜினியின் ‘பேட்ட’

(UTV|INDIA)-சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘பேட்ட’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் வழங்கும் ரஜினியின் 165வது படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் முதல் முறையாக விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் நடிக்கிறார்கள். மேலும் இந்தி நடிகர் நவாசுத்தீன் சித்திக் இப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி நடிப்பதால் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியதிலிருந்து படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் படத்தின் ‘தலைப்பு என்னவாக இருக்கும்?’ என அனிருத் கேட்க விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுத்தீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஷ்காந்த் ஆகியோர் யோசிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த சுவாரஸ்யமான வீடியோ ரசிகர்களை கவர்ந்தது.

இதையடுத்து நேற்று மாலை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. படத்துக்கு ‘பேட்ட’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ரஜினி ஸ்டைலாக தோன்றும் காட்சி பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளது. தலைப்புடன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் பேட்ட பட பர்ஸ்ட் லுக் வைரலானது. இதுகுறித்து பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, ‘ரஜினி படம் இயக்குவது எனது வாழ்நாள் கனவு. காரணம், அவரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன்.

பேட்ட படம் மூலம் எனது கனவு நிறைவேறியிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கியது. படத்தின் தலைப்போ பர்ஸ்ட் லுக்கோ நாங்கள் வெளியிடவில்லை. இதற்காக பொறுமையாக காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளில் இருந்தே ரசிகர்களை போல், நானும் ஆவலுடன் இருக்கிறேன். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் ரஜினியின் 165வது படம். அனைத்து தரப்பு ரசிகர்களும் என்ஜாய் செய்யும்படி இந்த படம் இருக்கும். சீக்கிரமே படத்தின் படப்பிடிப்பு முடிந்து, சீக்கிரமே படம் திரைக்கு வரும்’ என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹிந்தி சினிமாவில் களமிறங்கும் கீர்த்தி…

குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும்-ஹன்சிகா

குறுகிய ஒரு வருடகாலப் பகுதிக்குள் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்காக யூ. டிவியின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளன