வகைப்படுத்தப்படாத

ஈராக் போராட்டத்தின் வன்முறையில் ஒருவர் பலியானதுடன் 24 பேர் படுகாயம்

(UTV|IRAQ)-ஈராக் நாட்டில் நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஸ்ரா நகரில் கடந்த திங்கள் அன்று உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக அமைதியாக தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்புப்படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

பதிலுக்கு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 8 பேர் உயிர்ழந்தனர். பாதுகாப்பு படையினர் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பாஸ்ரா நகரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகளையும் துண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வன்முறை காரணமாக பாதுகாப்புப்படையினரால் நேற்று அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னரும் போரட்டங்கள் நடைபெற்றதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், போராட்டக்காரர்கள் 14 பேர், பாதுகாப்புப்படையை சேர்ந்த 10  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வன்முறை காரணமாக அப்பகுதியே போர்க்களமாக காட்சியளிக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

மோடியை நாளை சந்திக்கிறார் பிரதமர் ரணில்

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

Sri Lanka inks agreement with India to upgrade railway lines