சூடான செய்திகள் 1

ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயம்

(UTV|JAFFNA)-யாழ்.கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளில் இன்று(06) அதிகாலை ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டினை சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய பொருட்களையும் அடித்து நொறுக்கியதுடன், வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) உட்பட செல்வராசா சஜீபன் (வயது 25) ஆகியோருடன் அயல் வீட்டுக்காரப் பெண்மணி பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

மேலும் ஒரு புதிய கொரோனா நோயாளி அடையாளம்

மாத்தறை – பெலியெத்த வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அடுத்தாண்டு திறப்பு