கிசு கிசு

அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா?

(UTV|INDIA)-நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கினாலும் புரமோ‌ஷன் பாடலான கல்யாண வயசு பாடலை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கினார்.

அனிருத் இசையமைத்து, பாடி, நடித்த அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சமந்தா நடிப்பில் வருகிற 13-ந்தேதி வெளியாக உள்ள யு டர்ன் படத்துக்கும் இதேபோல ஒரு புரமோ‌ஷன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை கிருஷ்ண மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்திற்கு பூமா சந்திரா தேஜஸ்வி இசையமைத்துள்ளார்.
ஆனால் புரோமோ பாடலுக்காகப் படக்குழு அனிருத்தை ஒப்பந்தம் செய்தது. அவரே பாடி நடித்துள்ள இந்தப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது. விளம்பரத்துக்கு உதவியதற்காக அனிருத்துக்கு சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

திரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

இளவரசர் ஹரி அணிந்திருக்கும் மோதிரத்திற்கு இத்தனை ரகசியங்களா?

தமன்னாவை திருமணம் செய்ய ஆசை – ஸ்ருதி