(UTV|COLOMBO)-இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு நாளை(05) முல்லைத்தீவு, காலி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட ஒத்திகை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப்பணிப்பாளர் சி.லிங்கேஸ்வர குமாரின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை(05) குறித்த பகுதிகளில் கரையோரங்களில் வாழும் மக்களை வெளியேற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒத்திகை நிகழ்வு தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லையென எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]