வகைப்படுத்தப்படாத

மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் படுகாயம்

(UTV|INDIA)-கேரளாவின் எர்ணாகுளம் தெருக்களில் கல்லூரி சீருடையில் மீன் விற்று பிரபலமானவர் மாணவி ஹனான்.

சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பரவி பலரும் மாணவி ஹனானுக்கு பாராட்டு தெரிவித்தனர். முதல்-மந்திரி பினராயி விஜயனும் மாணவி ஹனானை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த நிலையில் மாணவி ஹனான் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூர் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஊர் திரும்பும் போது அவரது கார் சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி ஹனான் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற ஹனான் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்துக் குறித்து மாணவி ஹனான் கூறும் போது, சாலையில் ஒருவர் திடீரென கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பிய போது கார் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியது.

இதில் எனது உச்சந்தலை, கை, கால், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Chief Justice summoned before COPE

இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் கைது

பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை