சூடான செய்திகள் 1

கலஹா சம்பவம்-பிரதேசவாசிகள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

(UTV|KANDY)-கண்டி – கலஹா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருத்துவமனை வளாகத்தில் அமைதியற்ற வகையில் செயற்பட்டவர்களை கலைப்பதற்காக காவற்துறையினர் நேற்றிரவு கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இரண்டு தடவைகள் வானத்தை நோக்கி கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக சங்கர் சவீ என்ற குழந்தை பெற்றோர்களால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் ஒன்று உரிய நேரத்துக்கு சிகிச்சையளிக்கப் படாததன் விளைவாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்து, குழந்தையின் பெற்றோரும், பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்களை கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த இரண்டு மருத்துவர்களையும் அங்கிருந்து வெளியேற முடியாத வண்ணம் பிரதேச மக்கள் மருத்துவமனை வளாகத்தில் திரட்டு இருந்தனர்.

இதன்போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாந்தி சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)

கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையில் மீண்டும் விமான சேவை

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை