கேளிக்கை

அம்மாவுக்கு ராக்கி கட்டிய ஸ்ருதி…

(UTV|INDIA)-ஸ்ருதிஹாசன் எதையும் வித்தியாசமாக செய்பவர். நேற்று நாடு முழுவதும் ரக்‌‌ஷ பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் சினிமா நடிகர், நடிகைகளும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

அப்படிக் கொண்டாடிய சிலர் தங்களது சமூக வலைதளங்களில் அதுகுறித்து பதிவிட்டனர். அந்த வரிசையில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடியிருக்கிறார். பொதுவாக ரக்‌ஷா பந்தன் சகோதர சகோதரிகளுக்குள்தான் பெரும்பாலும் பரிமாறிக் கொள்ளப்படும்.

ஆனால் ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இருவரும் இணைந்து இருக்கும் புகைப் படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து கூறிய அவர் “இது எனது அம்மா. நாங்கள் இருவரும் ராக்கிகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டோம். விரும்புகிற ஒருவரைக் காப்பதே ரக்‌ஷா பந்தன். சகோதரர் இல்லை, ஆனால் அம்மா இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்துவருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை

நஸ்ரியாவுக்கு வந்த SMS … கடுப்பான நஸ்ரியா!

ஶ்ரீதிவ்யாவுக்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?