சூடான செய்திகள் 1

யாழில் பதிவாகிய பல தாக்குதல் சம்பவங்கள்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நேற்று (22) தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவின் கொக்குவில் பகுதியில், நேற்று மாலை 3.30 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த 9 பேர் கொண்ட குழுவால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டு சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சுன்னாகம் பகுதியில் முகத்தை மறைத்துக்கொண்டுசென்ற அறுவர் கொண்ட குழுவால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை சந்தேகநபர்கள் தீக்கிரையாக்கியுள்ளதுடன், வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, கொக்குவில் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த 9 பேர் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளதுடன், 3,800 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த 3 சம்பவங்களுடனும் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு