சூடான செய்திகள் 1

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது

(UTV|COLOMBO)-அரசியல் யாப்புக்கு அமைவாக மிகவும் தெளிவாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கோ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 31(11) பிரிவின் படி மக்களினால் இரு தடவைகள் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியிட முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சத்தியப்பிரமாணம் ஒன்றைச் செய்ய வேண்டும். இந்த சத்தியப்பிரமாணத்தில் தவறான தகவல்களை வழங்கினால், 190 ஆம் இலக்க சட்டத்தின் படி குற்றமாக கருதப்படும்.

இதற்காக 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அமைச்சர் விஜேதாச மேலும் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ம் திகதி விடுமுறை

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்