சூடான செய்திகள் 1

மகிந்தவின் இல்லத்திற்கு சென்ற சி.ஐ.டி

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவினர் தற்சமயம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்.

இதன்பொருட்டு இன்று முற்பகல் 11.20 அளவில் குற்ற புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு, கொழும்பு – 07 – விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு சென்றது.

மகிந்த ராஜபக்ஸவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள அவரின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு வருவதாக குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னதாகவே அறிவித்திருந்தது.

அதன்படி, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்களும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் அங்கு கூடியுள்ளனர்.

கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும் முன்னர் குற்ற விசாரணை பிரிவினர் வாக்கு மூலங்களை பெற்றுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியானது

எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம்

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை