(UTV|COLOMBO)-ரயில் சாரதிகள், காப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்டோரின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று(14) இடம்பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் அரச சேவையில் உள்ளோரது பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அனைத்து அரச ஊழியர்களதும் சம்பள பிரச்சினைகள் நிறைவுக்கு கொண்டு வரும் வரையில் இருக்க முடியாதென்றும், 21ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்காதவிடத்து 21ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]