வளைகுடா

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து

(UTV|SAUDI)-பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் வருகின்ற 18-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி அரசர் சல்மான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல், இளவரசர் முகமது பின் சல்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு தெரிவித்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாரிய பிழையொன்றின் விளைவாகவே ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளார்

துபாயில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

சவுதியில் பயங்கரவாத தாக்குதல- 4 பேர் பலி