கேளிக்கை

மற்றவர்களுக்காக வாழ முடியாது

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கேற்றாற்போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதனை உறுதிப்படுத்தும்படியாக இருக்கிறது.

வெளிநாடுகளில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
மேலும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் சில தகவல்கள் வருகின்றன. ஆனால் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருவரும் காதலை வளர்த்து வருகிறார்கள்.
நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக கோலமாவு கோகிலா வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். படத்தில் இடம்பெற்ற பாடலொன்றை விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது, காதல் பற்றிய பேச்சுக்களுக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறும்போது, “இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது” என்றார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதலமைச்சராகும் திரிஷா

‘கே.ஜி.எஃப் 2’ : செப்டம்பரில்

“பரமபதம் விளையாட்டு” முன்னோட்டம்