(UTV|COLOMBO)-சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு பரவியது. கண்ணுக்கு தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற டாஸ்க்கும் உண்டு.
உலகம் முழுவதும் பல இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு பலியாகினர். இந்தியாவிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து, மிகச்சமீபத்தில் கிகி என்ற சேலஞ்ச் பரவியது. ஓடும் காரில் இருந்து குதித்து பாடலுக்கு நடனம் ஆடுவது இந்த சவாலின் அம்சம்.
இந்த சேலஞ்சால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என போலீசார் எச்சரித்தனர். தற்போது, மோமோ என்ற சேலஞ்ச் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதுஎன்ன மோமோ சேலஞ்ச் என கேட்கிறீர்களா?
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். மோமோக்கு சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உங்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும்.
இந்த மிரட்டல் பயம் காரணமாக அர்ஜெண்டினா சிறுமி தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பேஸ்புக், வாட்ஸப் போன்ற தளங்கள் மூலமாக இந்த கேம் லிங் பரப்பப்படுகிறது.
மோமோ எனும் மிக ஆபத்தான சவால் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் என உலகம் முழுவதும் பரவி உள்ளது. மோமோ சவாலில் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வமே உங்களை ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்கின்றது.
இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோமோ கேம், மெக்சிக்கோ, ஜப்பான் மற்றும் கொலம்பியாவிலிருந்து செயல்பட்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]