(UTV|COLOMBO)-காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் முறையாக இடம்பெறுவதற்கான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், நீதி அமைச்சருமான சிமோநெட்டா சொமாருகா நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்து, பல்வேறு சந்திப்புகளை நடத்தி திரும்பிச் சென்றுள்ளார்.
அவர் இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆய்வினை நடத்துவதற்காகவே இலங்கை வந்திருந்தார்.
இலங்கையில் அவர் தங்கி இருந்தக் காலப்பகுதியில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களையும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதானி, மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
அவரது விஜயம் தொடர்பில் சுவிட்சர்லாந்தின் ஊடகம் ஒன்று வெளியிட்ட செவ்வியில், இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் என்று அவர் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]