கேளிக்கை

விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

தெறி, மெர்சல் என விஜய்யை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ள அட்லி, சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதைக்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில், விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் 63 குறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு

3000 முறை காதலை சொன்ன சமந்தா? (PHOTOS)

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்…