வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி கொலை முயற்சி

(UTV|COLOMBO)-வெனிசுவேலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி வெனிசுவேலா தவித்து வருகிறது.

அந்நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு மறைந்த பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மதுரோ (55) ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில், அந்நாட்டின் இராணுவத்தின் 81 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நிகோலஸ் மதுரோ நேற்று கலந்து கொண்டார். அவர், தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் பேசி கொண்டிருந்தபொழுது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) வெடிக்க செய்யப்பட்டன.

இதனை அடுத்து நிகோலஸ் உடனடியாக தனது உரையினை நிறுத்தினார். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். எனினும், பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்வங்களில் தொடர்புடைய 6 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வெனிசுவேலா உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் கூறுகையில், தாக்குதல்தாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைகளில் இருந்து முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொலம்பியா மற்றும் அமெரிக்காவினர் தான் என்னை கொல்ல திட்டமிட்டு சதி செய்து உள்ளனர் என இந்த தாக்குதல் குறித்து நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து

MV Xpress pearl : உள்ளூர் ஏஜென்ட் தலைவருக்கு பிணை

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு