சூடான செய்திகள் 1

என்னை ‘Sir’ கூறி அழைக்கவும்-டிராஜ் பியரத்ன

(UTV|COLOMBO)-மஹரகம நகரசபை தலைவர் டிராஜ் பியரத்ன விடுத்த அறிவித்தல் ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகின்றது.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயாதீன குழுவில் போட்டியிட்டு மஹரகம நகரசபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தலைவர் டிராஜ் பியரத்ன விடுத்த அறிவித்தலே சமூக ஊடகங்களில் கேளிக்கை செய்யப்பட்டு வருகின்றது.

நகரத்தின் முதல் பிரஜை என்பதாலும், இந்த நிறுவனத்தில் பிரதான நிறைவேற்று பதவியை வகிப்பதாலும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் தன்னை ‘சார்’ கூறி அழைக்க வேண்டும் என மஹரகம நகரசபை தலைவர் டிராஜ் பியரத்ன அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிவித்தலை அடுத்து அவரது தொலைபேசி இலக்கம் பகிரப்பட்டு, அதற்கு அழைத்து Sir கூறுமாறு தெரிவித்தும், குறித்த அறிவித்தலை கேளிக்கை செய்யும் விதத்திலும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம்

சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஜப்பானுக்கான விமான சேவையில் தாமதம்