கேளிக்கை

தனுஷை பென்டெடுக்கும் பிரபுதேவா

(UTV|INDIA)-தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்தை தவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் `மாரி-2′ படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருடன் சண்டைப்போடும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்ட போது, நடிகர் தனுஷுக்கு கை, மற்றும் கால்களில் அடிப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். இந்த சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் இருந்தது. தற்போது அந்த பாடலை படமாக்கி வருகிறார்கள். இந்த சிறப்பு பாடலுக்கு நடிகர், இயக்குனர் மற்றும் நடன புயல் பிரபுதேவா நடனம் அமைக்கிறார். இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இணையத்தில் தீயாக பரவும் நடிகை சமந்தாவின் காணொளி!!

முக்கிய மைல்கல்லை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்

ஊழியர்களின் பணி நாட்களை குறைத்தது ஐரோப்பா!