சூடான செய்திகள் 1

கொழும்பிலிருந்தே அதிகமான சிறுவர் வன்முறை குறித்த முறைப்பாடுகள்-சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

(UTV|COLOMBO)-சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகம் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகள் பதிவாகும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம் 2ஆவது இடத்திலும் 3ஆவது இடத்தில் குருநாகல் மாவட்டம் உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுவர் வன்முறை தொடர்பில் 2008 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் குறிப்பிடுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர்களைத் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மட்டும் 64,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

ஹெரோயினுடன் “கடுவலை பபி” கைது…

ஐ.தே கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…