சூடான செய்திகள் 1

பாவனைக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO)-எல்பிட்டிய, உரகஸ்மங்கந்திய ஆகிய பிரதேசங்களில் பாவனைக்கு பொருத்தமற்ற உணவுபொருட்களை விற்பனை செய்த 19 கடைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கமைய உணவகங்கள் உள்ளடங்கலாக 35ற்கும் அதிகமான கடைகள் பரிசோதனை செய்ய சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

காலாவதி ஆன உணவு வகைகள், காலாவதி திகதி குறிப்பிடப்படாத உணவு வகைகள், முறையற்ற விதத்தில் பாவனை செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டிகள், தவறான முறையில் உணவுகளை சேமித்தல், சுத்தமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் தொடர்பாக இதன் போது அவதானிக்கப்பட்டது.

 

காலி மாவட்டத்தின் சுகாதார சேவை அலுவலகத்தின் பரிசோதகர்கள் மற்றும் கரந்தெனிய சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது

பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று சி.ஐ.டி முன்னிலையில்