வகைப்படுத்தப்படாத

மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை

(UTV|INDIA)-திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (29) வௌியான வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் முதலில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சைகளுக்கு பின்னர் உடல்நிலை சீராகி வருவதாகவும் அவர் நேற்று (30) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலையினால் நேற்று கலைஞரின் உடல்நிலை தொடர்பில் அறிக்கை வௌியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், எவ்வித மருத்துவ உபகரணங்களின் உதவியுமின்றி கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு, கலைஞர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்ற தொல் திருமாவளவன், ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Showers likely in evening or night

உலகின் முதன் முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர ஹோட்டல்

“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!