சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் மாதம் பிரதி அமைச்சர் குறித்து இறுதி தீர்மானம்

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்று பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்தின் ஊடாக நீதிமன்றம் அவமதிக்கப்பட்டமை தொடர்பில், ஏன் தண்டிக்கப்படக்கூடாது என்பதை கோரும், சட்ட ஆவணம், சட்ட மா அதிபரினால் உயர் நீதிமன்றிலும், ரஞ்சன் ராமநாயக்கவிடமும் இன்று கையளிக்கப்பட்டது.

கடந்த 18ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தினால் சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து, நீதிமன்றை அவமதிப்பதைப் போல் அமைந்துள்ளதாக, கடந்த மாதம் 4ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்ட மா அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளில் பலர் மோசடி செய்தவர்கள் என்ற கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

UPDATE-கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு

2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டுகோள்