வகைப்படுத்தப்படாத

சீனாவில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

(UTV|CHINA)-சீன தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப்பகுதியான சோயாங் மாவட்டத்தில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. உயர் பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில், இந்தியா மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு மிக அருகாமையில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. கரும்புகை மூட்டமும் எழுந்தது. இதனால் சக்திவாய்ந்த குண்டு வெடித்திருக்கலாம் என தகவல் பரவியது. சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
கரும்புகை எழுந்ததையும், அந்த பகுதியில் போலீசார் கயிறு கட்டி போக்குவரத்தை தடை செய்ததையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

Hong Kong: Police and protesters clash on handover anniversary

அஞ்சல் பணியாளர்களும், நோயாளர் காவுகை வண்டி சாரதிகளும் பணிப்புறக்கணிப்பில்