வகைப்படுத்தப்படாத

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

(UTV|INDIA)-மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவண்டி பகுதியை சேர்ந்த ரசூல்பாக் என்ற இடத்தில் நேற்று இரவு மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக முதல் கட்டமாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ලංකාව ඉහළ මැදි ආදායම් ලබන රටක් බවට ශ්‍රේණිගත කරයි – ලෝක බැංකුව

காலநிலையில் திடீர் மாற்றம்!! பொதுமக்களே அவதானம்!!!

தலைநகர் வாஷிங்டனில் அஞ்சலி செலுத்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புஷ் உடலை எடுத்து வர முடிவு: