வகைப்படுத்தப்படாத

அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் பலர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-தென் கிழக்கு லாஓஸில் நீர்த்தேக்கம் ஒன்றின் அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதுடன், பல எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அணைக்கட்டு உடைப்பெடுத்த காரணத்தால் நீர் மிக வேகமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதாகவும், நாட்டின் தென்கிழக்குப் பகுதியின் சன்சாய் மாவட்டத்தில் நீரின் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

நாட்டின் தென்கிழக்குப் பகுதியின் சன்சாய் மாவட்டத்தில் 06 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

6600 இற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது விரைவாக மீட்பு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மட்டக்களப்பிலும் பூரண ஹர்த்தால்

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாசி இஞ்சி சூப்