வகைப்படுத்தப்படாத

கடும் வெப்பம் காரணமாக ஜப்பானில் 65 பேர் பலி

(UTV|JAPAN)-ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டொக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று (23) வெப்பநிலை மிக அதிகமாக காணப்பட்டதாகவும் அது 41.1 செல்சியஸாக பதிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது 2013 ஆம் ஆண்டு பதிவான 41 செல்சியஸ் வெப்பநிலையே ஜப்பானில் பதிவான அதிக கூடிய வெப்பநிலையாக காணப்பட்டது.

பல நகரங்களிலும் வெப்பநிலை சுமார் 40 செல்சியஸாக காணப்படுவதுடன் வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையை தவிர்த்து குளிரூட்டப்பட்ட இடங்களில் இருக்கும் படியும், அதிகம் தண்ணீர் அருந்தும் படியும் ஜப்பான் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

10,000 க்கும் அதிகமானவர்கள் அதிக வெப்பநிலை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கிரீஸ் நாட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்

3 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் அழிக்கப்படவுள்ளன