சூடான செய்திகள் 1

50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, புத்தளத்தில் இருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மெழுகுவர்த்திகளை ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவதும் முக்கியம்

விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட மிகப்பெரிய விமானம்