சூடான செய்திகள் 1

கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்

(UTV|COLOMBO)-சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இரகசியமாக வைத்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகளை இனங்கானுவதற்காக விசேட உபகரணங்களைப் பொருத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கைதிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பல வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை தொடர்பில் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் 30க்கும் அதிகமான குழுக்களை சேர்ந்த 170 – 200க்கும் இடைப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அதிகளவில் களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் பூசா ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நிஷான் தனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலக வனாந்தர வார மாநாட்டில் ஜனாதிபதி இன்று விஷேட உரை

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]