வகைப்படுத்தப்படாத

சுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரி சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. இந்த ஏரியில் படகில் சென்று பயணிப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். ஏரியின் மையத்தில் சென்றபோது, படகு திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கியதால் அலறி துடித்தனர். அவர்களது அலறலை கேட்ட அங்கிருந்த மீட்பு படையினர் உடனே அவர்களை காப்பாற்ற விரைந்தனர்.

ஏரியில் மூழ்கிய 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூழ்கியுள்ள மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சுற்றுலா சென்ற படகு மூழ்கிய விபத்தில் 8 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நிவாரண உதவி

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு

ගත වූ පැය 24 කාලය තුල බීමත් රියදුරන් 179 ක් අත්අඩංගුවට