சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்களுக்கான விசேட செய்தி

(UTV|COLOMBO)-க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர்.

இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.

தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிடின் 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 மற்றும் 0718 323 658 ஆகிய இலக்கங்களுக்கு ​தொடர்பு கொண்டு தொலைநகல் மூலம் பரீட்சை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்…

“அரசியல்வாதிகளின் அளுத்கடைத் தியானம்”

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விசேட தேடுதல்