விளையாட்டு

கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெறுகிறாரா?

(UTV|INDIA)-இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும், முன்னாள் தலைவருமான டோனி 2 ஆவது போட்டியில் 59 பந்துகளில் 37 ஓட்டங்களும், கடைசி போட்டியில் 66 பந்துகளில் 42 ஓட்டங்களும் எடுத்தார்.

இதனால் டோனியின் நிதானமான துடுப்பாட்டம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

லீட்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.

தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீச்சில் ஈடுபட்டாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

தோல்வி அடைந்த போட்டியில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது.

37 வயதான டோனி 2014 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முகமது ஷமிக்கு கொரோனா – ஆஸிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகல்

2006இல் எழுதிய வரலாற்றை இலங்கை அணி மாற்றியெழுதுமா?

இருபதுக்கு 20 தொடர் – இந்திய குழாம் அறிவிப்பு