சூடான செய்திகள் 1

கொழும்பு மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதை பொருள் விற்பனை

(UTV|COLOMBO)-போதைப்பொருள் வர்த்தகர்கள் கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலைகளை மையபடுத்தி போதை வர்த்தகத்தை முன்னெடுத்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக, மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு விற்பனை முறைகள் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவிகளை போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகளை போதை வர்த்தகர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போதை வர்த்தகத்துக்கு எதிராக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சால் புதிய சந்தைப்படுத்தல் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கண்டி – மஹியங்கன வாகன விபத்தில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு