சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்ககொள்ளப்பட்டது.

இதன்போதே மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யின்துடுவவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு அமெரிக்காவிற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றத்தில் உள்ள அவரது கடவுச்சீட்டை 2 இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியும் மீண்டும் விளக்கமறியலில்