சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நேற்று  நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேற்று (10) மாலை நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஒக்டோன் 92 வகை பெற்றோலின் விலை 8 ரூபாவாலும், ஒக்டோன் 95 வகை பெற்றோலின் விலை 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒக்டோன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

அத்துடன் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…

பல பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்