சூடான செய்திகள் 1

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட

(UTV|COLOMBO)-நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை கையளித்தார்.

புதிய தலைவராக பதவியேற்றுள்ள அனுர மத்தேகொட சட்டத்துறையில் 37 வருடகால அனுபவம் கொண்டவர். சுமார் 20 வருட காலம் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச தரப்பு சட்டத்தரணியாக பணியாற்றிய அவர் நெதர்லாந்து ஹேக்கில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) 11 வருடங்கள் பணியாற்றியவர். சர்வதேச நீதிமன்றத்தில் யூகோஸ்லேவிய யுத்தக் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச வழக்கறிஞர் குழுவில் அங்கத்தவராகப் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே அவர் அங்கு பணியாற்றியிருந்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.

அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்ற பின் கருத்துத் தெரிவித்த அவர்,

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட விதிகளுக்கு ஏற்ற வகையில் பொறுப்புடன் பணியாற்ற திடசங்கட்பம் பூண்டுள்ளதாகவும், நுகர்வோரைப் பாதுகாப்பது மாத்திரமின்றி வர்த்தகர்கள், மற்றும் உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதிக்காத வகையில் தனது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரவியின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு சீல்…

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது