கேளிக்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை

(UTV|INDIA)-தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோனாலி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது,

உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததது.
அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

43 வயதாகும் சோனாலி பிந்த்ரே தமிழில் `பாம்பே’ படத்தில் அறிமுகமாகி, `காதலர் தினம்’ படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இசை நிகழ்ச்சி நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன்- ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தி சூப்பர்ஸ்டார் அமீருக்கும் கொரோனா

தமிழில் ரூ.100 கோடி படங்களே இல்லை!…வெளிவந்த அதிர்ச்சி தகவல்