(UTV|INDONESIA)-இந்தோனேசியாவில் ஆஷே மாகாணத்தில், முதன்முதலாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பதவியில் இருந்து வந்தவர், இரவாண்டி யூசுப். இவர் முன்னாள் கிளர்ச்சியாளர் ஆவார்.
தேசத்துரோக குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, சிறையில் இருந்து தப்பித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. பின்னர் இவர் அரசுடனான சமரச உடன்படிக்கைக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்டு கவர்னர் ஆனார்.
இவர் 500 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.3,400 கோடி) மேற்பட்ட அரசு நிதியை சட்ட விரோதமாக திட்டங்களின் பெயரால் வாரிச்சுருட்டி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது தொடர்பாக இவர் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இவரை ஊழல் தடுப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த ஆஷே மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது, இங்கு இஸ்லாமிய மதச்சட்டம் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]