வகைப்படுத்தப்படாத

தாய்லாந்து குகைக்கு பொருட்கள் எடுத்து சென்ற முக்குளிப்பவர் ஒருவர் உயிரிழப்பு

(UTV|THAILAND)-தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களை மீட்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த முக்குளிப்பவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம் லாங் குகையில் சிக்கியிருப்பவர்களுக்கு பொருட்களை வழங்கச் சென்ற சமன் குனன் திரும்பும் வழியில் மயங்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 38

அவருடன் பணிபுரிந்தவர்களால் சமனின் மூச்சினை திரும்பி வரவைக்க இயலவில்லை.

கடற்படை பணியை விட்டுச் சென்ற இவர், இந்த மீட்புப் பணியில் உதவ திரும்பினார்.

குகையில் சிக்கியவர்களை மீட்க தாமாக முன்வந்த இவர், இரவு 2 மணி அளவில் உயிரிழந்தார் என சியங் ராவ் நகர துணை ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பிராண வாயுவை குகையில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அவரது பணி. ஆனால், திரும்பி வரும் வழியில், அவருக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை”

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Devotees restricted from entering ‘Maha Maluwa’

Supreme Council of the Muslim Congress to convene today

‘சந்திரயான் 2’ விண்கலத்துடனான தொடர்பு துண்டிப்பு