சூடான செய்திகள் 1

கோட்டாவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-தனது தந்தையை வெள்ளை வேனில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் 8 வயதாக இருக்கும் போது கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த வாகனமொன்று தமது வாகனத்தை நிறுத்தி, தந்தையைக் கடத்திச் சென்றதாகவும் அவ்விளைஞன் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் ஜெயனி தியாகராஜா எனும் யுவதியொருவர் தனது சகோதரரின் கடத்தல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த இளைஞனை பிரான்சிலுள்ள தமிழீழ அமைப்பொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு வலியுறுத்தல்-பொதுநலவாய நாடுகள் அமைப்பு

லண்டன் செல்லும் விஜயகலா