வணிகம்

ஜோன் கீல்ஸ் குழு தனது ஊழியர் தன்னார்வளர்களைப் பாராட்டுகின்றது

(UTV|COLOMBO)-ஜோன் கீல்ஸ் குழுமம்ச 2017/18 இன் கூட்டிணைந்த சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்து உயர் செயலாற்றுகைகளை வெளிப்படுத்தியவர்களை அதன் வருடாந்த தன்னார்வாளரை அங்கீகரிக்கும் தினமான 21 ஜுன் 2018 அன்று கிங்ஸ் கோர்ட், சினமன் லேக் சைட்டில் பாராட்டியது.

ஊழியர் தன்னார்வம் என்பது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பங்களிப்பு உபாயமார்க்கமாகும். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டிணைந்த சமூக பொறுப்பு நிறுவனமான, ஜோன் கீல்ஸ் அமைப்பினால் கொண்டு நடாத்தப்படும் பெரும்பாலான கருத்திட்டங்கள் தன்னார்வளர்களின் ஆதரவுடன் செயற்படுகின்றது.

தன்னார்வாளர் விடுமுறைக் கொள்கை குறைந்த தடைகளுடன் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு செயற்பாடுகளுக்காக ஊழியர்களை விடுவிப்பதற்கு இயலுமானதாகையினால், குழுமத்தின் தன்னார்வாளர் வலையமைப்பினால் ஊழியர்கள் அவர்களின் நாளாந்த பணிகளுக்கு அப்பால் சென்று சமூக மற்றும் சுற்றாடல் பணிகளுக்கும் தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு இயலுமானதாக்குகின்றது.

திறன்சார் தன்னார்வம் மற்றும் நிர்வாக ஆதரவுகளில் பங்குபற்றுபவர்க்கு தன்னார்வார்கள் கருத்திட்ட ஆதரவாளர்கள், பயிலுனர்கள் மற்றும் பயிற்றப்பட்ட உதவியாளர்கள் இருந்து வேறுபடுகின்றனர்.

2017/18 ஆண்டு காலப்பகுதியில் அமைப்பினால் 5411 மணித்தியாளங்கள் பதிவு செய்யப்பட்ட, 1398 நிகழ்வுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்களில், துறைசார், வியாபார மட்டத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டிணைந்த சமுகப் பொறுப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து 840ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்குபற்றினர். ஒவ்வொரு வருடமும் தன்னார்வாளர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக வருடாந்த ´தன்னார்வாளர் அங்கீகரித்தல் தினத்தில்´ அமைப்பின் தன்னார்வாளர் கணிப்பீட்டு பொறிமுறையின் கணிப்பீட்டு அடிப்படையில் ´பிளட்டினம்´, ´தங்கம்´, ´வெள்ளி´, ´வெண்கலம்´ மற்றும் ´சிறப்பு´ அடிப்படையில் அங்கீகரிக்கப்படுவர்.

அமைப்பின் விஞ்ஞான ஊக்குவிப்புக் கருத்திட்டத்தின் வெற்றியாளர்களான ஜோன் கீல்ஸ் ஆராய்ச்சியின் தலைவர் மற்றும் அந்த நிகழ்வின் ´தங்கப்´ பெறுகையாளரான முதித சேனரத்- தன்னார்வம் தொடர்பாக கூறுகையில், ´´ஒரு தன்னார்வளராக எனக்கு பெரும் உவகையூட்டுவதாக அமைந்தது. எதுவென்றால், கிராமப்புறங்களைச் சார்ந்த பிள்ளைகள் குறியீட்டு மொழியைப் பயன்படுத்தி சிறு ரோபோக்களை கொண்டு எளிய பணிகளைச் செய்செய்வித்ததை கண்டதே ஆகும். இலங்கை பல்வகைத் திறமைகளை கொண்ட நாடு என்பதற்க்கு இதுவே பெரும் சான்றாகின்றது.

இத்தகைய திறமைகளை நாம் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும் தினமே, நம் நாட்டை மாற்றியமைப்பதற்கான முதற்படியாகும்´ தன்னார்வளாளர்களை அங்கீகரிக்கும் தினம் 2018 ஜோன் கீல்ஸ் குழுமத் தலைவர் மற்றும் பணிப்பாளர்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், திரு, சுசந்த ரத்னாயக்க, தலைவர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்கஸ் பிஎல்சி ´தொடர்ச்சியாக நீங்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்புக்கும் பேரார்வத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்கு நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றேன்.

அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பணிக்கு நீங்கள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய தூதர்கள் மற்றும் எல்லா தன்னார்வ ஊழியர்களும் தொடர்ச்சியாக சமூகத்தின் பாரிய பிரிவுகளை வலுவூட்டுகின்றனர்.´ என்று கூறினார்.

அத்துடன் இந்த சந்தர்ப்பத்தை அமைத்து, வருகின்ற டிசம்பர் 2018ம் ஆண்டு ஓய்வுபெற இருக்கும், கடந்த 12 ஆண்டுகளாக கூட்டிணைந்த சமூகப் பொறுப்புக்கு தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பையும் தலைமைத்துவத்தையும் வழங்கிய திரு ரத்நாயக்க அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதிய கிளையை ஆரம்பித்த DFCC

அத்தியாவசிய பொருட்களுடன் IDH மருத்துவனை ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்றது Kapruka