சூடான செய்திகள் 1

மாத்தறை கொள்ளைச் சம்பவம் – வாகனத்துடன் ஒருவர் கைது

(UTV|MATARA)-மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகப்படும் மோட்டார் வாகனம் மற்றும் நபர் ஒருவரை இன்று (02) அதிகாலை களுத்துறை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினர் கைது செய்யதுள்ளனர்.

தலகல, பாவனா வீதி, மொரகஹஹேன எனும் முகவரியில் உள்ள வீட்டில் வைத்தே குறித்த நபரையும் வாகனத்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகப்படும் CAE 4706 எனும் வௌ்ளை நிறமுடைய அல்டோ ரக மோட்டர் வாகனம் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது அது ஒரு பெண் ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்கள் குறித்த வீட்டில் 4 மாத காலம் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய கொஸ்கொட தாரக, உயிரிழந்த சாமர மற்றும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்படாமல் உள்ள கொஸ்கொட தில்சான் எனும் நபர் ஆகியோர் குறித்த வீட்டில் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (01) இரவு முதல் இன்று அதிகாலை வரை குறித்த வீட்டை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்த போது, வாகனத்தின் உரிமையாளரான பெண்ணின் கணவர் வந்தததையடுத்து குறித்த நபரையும் வாகனத்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மடபாதகே கபில குமார எனும் 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயின் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மூவரையும் குறித்த வாகனத்தின் மூலமே வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டு தீர்மானம் திங்களன்று க் கொள்ளும் முறைமை தொடர்பான

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி…

ரயில்வே ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்