சூடான செய்திகள் 1வணிகம்

சமூக தொழில் முயற்சியாண்மை தற்போது படிப்படியாக வேரூன்றி வருகிறது

(UTV|COLOMBO)-உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரதான பாத்திரமாக விளங்கும் சமூக தொழில் முயற்சியாண்மை, தற்போது படிப்படியாக வேரூன்றி வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஐக்கிய நாடுகளின் எஸ்கேப் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ள தேசிய ரீதியிலான, சமூக தொழில் முயற்சியாண்மை ஆய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று காலை (28) இடம்பெற்ற இந்த விழாவில், அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

வெறுமனே இலாபத்தை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சியாண்மையை விட சமூக தொழில் முயற்சியாண்மையானது, பிரதானமாக சேவைகளையும், இலாபத்தையும் மையமாகக்கொண்டு இயங்கி வருவது, நமது நாட்டுக்கு மிகவும் அத்தியவசியமானது.

இன்று வெளியிட்டு வைக்கப்பட்ட இந்த அறிக்கையில், சுவாரஷ்யமான பல சமூக பொருளாதார விடயங்கள் வெளிவந்துள்ளன. இந்த அறிக்கையானது கொள்கை ரீதியான நமது கவனத்தை ஈர்க்கின்றது.

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை துறைகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் எனக்கு பரிச்சயப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. எனது அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) இந்தத் துறை தொடர்பான அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையின் சமூக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நெடா நிறுவனம் காத்திரமான பங்களிப்பை நல்கும் எனவும். நெடா நிறுவனத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு, சமூக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திக்கு உத்வேகம் அளிக்குமெனவும் நாங்கள் இத்துறை தொடர்பாக மேலும், ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருதுகின்றேன்” என்றும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கடும் வாகன நெரிசல்

சகல இனத்தவரும் ஒரே கூரையின் கீழ் கல்விகற்கும் பின்புலம் உருவாக்கப்படவேண்டும்

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது