சூடான செய்திகள் 1

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி-ஜீ.எல். பீரிஸ்

(UTV|COLOMBO)-ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி என முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவே, தேர்தல் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முன்வைப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்து, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீனா கட்டுப்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஊடகங்களில் வௌியாகும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான, தகுந்த ஆதாரங்களை முன்வைக்க தான் தாயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்

அனுருத்த பாதெனியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று